வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...
கவிதைகள்
நான்
கவிதை எழுதும்
பொழுதெல்லாம்
உன்னை
நினைப்பதில்லை....
உன்னை
நினைக்கும்
பொழுது மட்டுமே
கவிதை எழுதுகிறேன்.....
இப்போதெல்லாம்
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டிருக்கிறேன்.....
நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!
நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!
நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!
நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவளை காட்டிய
அந்த நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!
இல்லையென்றான பிறகும்
உன் நினைவுகள் மட்டும்
ஒரு தொடர் கதையாக
என்னை தழுவி வாழ வைத்து கொண்டிருக்கிறது
என் தாய் தந்தை ....
சகோதரி...
அண்ணன் தம்பி....
நண்பர்கள்....
தோழிகள்....
ஆனால் உன்னை மட்டும் இந்த உறவுகளில் சேர்த்த மனம் வரவில்லை ...
நீயே சொல்லடி... உனக்கும் எனக்கும் இருக்கும்
இந்த இனிய உறவுக்கு பெயர் என்ன....?
உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ... ஆனால்
"நீ இப்படித்தான் வாழவேண்டும்" என்று என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...
அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...
உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க
என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....
இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன் உன் விருப்பப்படி...
ஆனால்.....
அதை ரசிக்கத்தான் நீ இப்போது என்னுடன் இல்லை....
இந்த பிரிவு நமக்கு(நட்புக்கு) தேவையா.....?
நீயே சொல் ... என் உயிர் தோழி ...