Tuesday, July 27, 2010

உண்மை ஒன்று சொல்லிடவா?

உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!