Thursday, September 9, 2010

உன் நினைவுகள்

இல்லையென்றான பிறகும்
உன் நினைவுகள் மட்டும்
ஒரு தொடர் கதையாக
என்னை தழுவி வாழ வைத்து கொண்டிருக்கிறது


ஆசை

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.

ஆனால்,

இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!

ஏமாற்றம்

விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்!!!

நேசித்தால் மட்டும் போதும்

இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே:(:(:(

மௌனம்

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்.
ஆனாலும் அவள் பக்கத்தில் வரும்பொழுது
முந்திக் கொள்கிறது மௌனம்!!!

வாழ்க்கை

கனவோடு வாழ்ந்தேன்,
நினைவோடு வாழ நினைக்கிறேன்.
வாழ்க்கை கொடுங்கள் இல்லை,
வாழ விடுங்கள்!!!