Friday, July 30, 2010

நினைவு

மறக்க வேண்டும் என்று
நினைக்க
நினைக்க,
என் நினைவெல்லாம் நீயே!!!

Thursday, July 29, 2010

நினைவு

கணங்களில் அதிகரித்து செல்லும் உன் நினைவுகளால்
கனக்கிறது என் இதயம்
அச்சபடுகிறேன் நான்,
கடத்த நினைக்கும் உன் நினைவுகள்
கரைத்துவிடுமோ என் இதயத்தை என்று!!!

நான்

வலிகள் மட்டுமே வாழ்க்கையாகி
போனது இங்கு எனக்கு மட்டும் ..
பிரிந்து இருக்கும் குடும்பம்
புரியாத உறவுகள் ...அறிந்து
கொள்ள முடியாத நட்புகள் என
ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள் என்னுள் ..



இங்கு நான் சிரிப்பதும் சிரிக்க
வைப்பதும் வேஷங்கள் மட்டுமே...
அறியாதவயதில் நான் செய்த
சேட்டைகள் அனைத்தும் இன்று
விளைவுகளாய் என்னிடத்தில் ...


வருந்துவதை தவிர வேறு வழி
இல்லமால் வாழ செய்துவிட்டது சூழ்நிலை...
தினமொரு சிந்தனையில் சிக்கி
சிறுத்துகொண்டு போகிறது மனம்....
திசை அறிய முற்படும் போதெல்லாம்
திடீர் புயலாய் சிறு சிறு தடைகள் ..



அறியாத இத் தேசத்தில் சரியான
முடிவுகளை தேர்வு செய்வதில் இடியப்பமாய்
சிக்கல்..வழி துணைக்கும் வழி காட்டவும்
என் நிழல் தவிர யாருமில்லை இங்கு ....
என்னில் மீதமிருக்கும் நம்பிக்கைகளே
என்னை வழி நடத்துகிறது எப்போதும்....
அதுவும் விடைபெறும் சந்தர்பங்களில்
அனாதையாய் நான்...... !!

Tuesday, July 27, 2010

உண்மை ஒன்று சொல்லிடவா?

உன்னை நான்
எப்போ காதலித்தேன்
எதற்காய் காதலித்தேன்
எந்த நிமிடம் காதலித்தேன்
என்று
இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது.

ஆனால் காதலித்தேன்
இதுதான் உண்மை!

நீ
என் மீது
கோபப்படும் நேரமெல்லாம்
நான் செத்துப் பிழைக்கிறேன்

அதனால்
ஒரு போதும்
என்மீது நீ கோபப்படாதே!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய்
தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது.

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

என்னை நீ மறந்து விடாதே
ஏனென்றால்
உன் நினைவில்தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்.

இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!

Monday, July 26, 2010

வாழ்க்கை

கனவுகள் ஆயிரம் இருந்தாலும்
நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே !!!!
நிஜமான வாழ்க்கை..!


காதல்

நம் வாழ்வில்
நம் காதல் வாழ்வதும்

என் மரணத்தில்
என் காதல் வாழ்வதும்

உன் கையில்.....

Sunday, July 25, 2010

அழகு

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...


என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை
வண்டி வண்டியாய்...!!!

ஏன் இந்த வேதனை

ஒரு வேலை... நான்..

உன் காதலை புறக்கணித்து விட்டு

உன்னையே எனக்கு ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி இருந்தால் ...

என்னடி செய்திருப்பாய்..?

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

என் உயிர் தோழி


எப்படியோ வாழ்ந்திருப்பேன் ....

உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ... ஆனால்

"நீ இப்படித்தான் வாழவேண்டும்" என்று என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...

அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...

உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க

என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....

இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன் உன் விருப்பப்படி...

ஆனால்.....

அதை ரசிக்கத்தான் நீ இப்போது என்னுடன் இல்லை....

இந்த பிரிவு நமக்கு(நட்புக்கு) தேவையா.....?

நீயே சொல் ... என் உயிர் தோழி ...