Thursday, December 9, 2010

போகும்போது!!!!

நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

Friday, December 3, 2010

காதல் வார்த்தைகள்....!!

நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!

வலியால் துடிக்கிறது

கையளவுதான் இதயம் அதிலும் ஆயிரம் காயங்கள்
அதனால்தான் என்னவோ வலியால் துடிக்கிறது......!!

மறக்க சொல்கிறாய் எதை மறப்பது???

மறக்க சொல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா....

Thursday, December 2, 2010

காயம்

மருந்திட்டுக் கொள்ள மனம் இல்லை
மருந்திட்டும் மாற்றமில்லை
என் மனதில்
காயம்
என் காயங்களிலும் கசிகிறது
என் காதல் !

ஒரு தலை காதல்

அவள்...
காதலை தான் தரவில்லை
கவிதையை தந்தாளே
என்று நினைத்த போது
விழிகளின் ஓரத்தில்
கண்ணீர் வடிந்தது!

காதல்

காதல் என்றால் சுகம் என்றான் ஒருவன்

காதல் என்றால் வலி என்றான் ஒருவன்

காதல் என்றால் மனம் கணக்கும் என்றான் ஒருவன்

காதல் என்றால் அழகு என்றான் ஒருவன்

காதல் என்றால் கவிதை என்றான் ஒருவன்

காதல் என்றால் இனிக்கும்விஷம் என்று கூட

சொன்னான் ஒருவன்

காதலை பார்க்கும் பார்வையில் உள்ளது

அர்த்தம்

என்னை பொறுத்தவரை

காதல் ..................................... ?


என்ன புரியலையா அது விடை இல்லா கேள்வி குறி

பிடித்தது எதுவென்று நான் சொல்ல...

பிடிக்காதது ஏதேனும்

உன்னிடம் இருந்தால்தானே

உன்னிடம் பிடித்தது

எதுவென்று நான் சொல்ல முடியும்....