Tuesday, August 31, 2010

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்
உறவுகளை மறந்து
ஒருதியை மட்டும்
நினைத்து வாழும் புனிதமான
காதல்!!!

ஊர் உறங்கிய பொழுதில் கூட
உறங்காது விழிகள் ஆனால்
அவள் உறவை நினைத்து
ஏங்கிடும் இதயம்!!!!

மறக்காத காதல்

நம்ம விரும்புன பொண்ணு நமக்கே கிடைச்சி
அவ கூட வாழ்ந்தால் தான்
வாழ்கை என்று ஒன்னும் இல்ல,
சாகுற வரை அந்த பொண்ணு முகத்த கூட
பார்க்காமல் அவளை நினைச்சி
கொண்டே வாழ முடியும்,
நான் அப்படி தான் வாழ போறேன்.
தினமும் என் கனவுல வந்துருவா,
பகல் ல அவ போட்டோ பார்த்துகொண்டே
வாழ்ந்துருவேன்

Wednesday, August 25, 2010

நீயே சொல்

எனக்கும் எல்லா உறவுகளும் இருக்கிறார்கள் ...

என் தாய் தந்தை ....

சகோதரி...

அண்ணன் தம்பி....

நண்பர்கள்....

தோழிகள்....


ஆனால் உன்னை மட்டும் இந்த உறவுகளில் சேர்த்த மனம் வரவில்லை ...

நீயே சொல்லடி... உனக்கும் எனக்கும் இருக்கும்

இந்த இனிய உறவுக்கு பெயர் என்ன....?

Sunday, August 15, 2010

ஏமாற்றம்

ஏமாற்றகளை
சந்தித்த பின்
எதிர்பார்ப்பு
இல்லாமல்
வாழ
கற்று கொள்கிறேன்:(

பிரிவு

பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ...
??? ... கனவாக அல்ல ... ???
<<<... கண்ணீராக ... >>>

Tuesday, August 10, 2010

காதல் சின்னம்

தோல்வியின் சின்னம் "தாஜ்மஹால்".
வெற்ற்யின் சின்னம் இது வரை இல்லை.

ஏனென்றால்,

ஜெயித்தவன் காதலை மதிப்பதில்லை.
தோற்ற்வன் காதலை மறப்பதில்லை..

நினைவுகள்

தனிமையில் இருக்க முயற்சிக்கிறேன்.

முடியவில்லை..

என்றுமே என்னுடன் அவள் நினைவுகள் இருப்பதால்.