Tuesday, February 16, 2010

பெண்ணே

கவிதை எழுத தெரியாதே !
பெண்ணே உன்னை
பார்க்கும் வரையிலே !
நாள்தோறும் உன் முகம்
தேடி வந்தேன் கல்லூரிக்கு
என் முகம்
மறக்கும் வரை !!
இதுதான் காதலோ !!
உன்னில்
என்னைத் தொலைத்தேனே ...

மனம்

நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய மனக்குறிப்பு!!!

நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..




நட்புடன்,,,,

சிந்தனை

கண்டும் காணாமல் போகும்,
உன் பின்னால் போகும்
எல்லையில்லா என்
சிந்தனை...

மேகம்

ஏன் அழுகிறாய் ?
நீ தூது விட்ட
மேகங்கள்
பாதி வழியிலே
மழையாய்
கரையந்தற்கா ????

Sunday, February 14, 2010

நட்பு

சில வேளைகளில்....
உன் வாழ்க்கையில் ஒருவர் இருக்கலாம் -அல்லது
உன் இதயத்தில் ஒருவர் இருக்கலாம் -அல்லது
உன் கனவுகளில் ஒருவர் இருக்கலாம் -நானும்
உன்னுடைய ஒருவன் தான்!
உனக்கென்று எவரும் இல்லாத போது


நட்புடன் மதுரையில் இருந்து ஸ்ரீராம்

என்னவளே!

காதலால் நான் என்னை மறந்தேன்!
மனிதனுக்கும் மனம் ஒன்று இருப்பதை உணர்தேன்!
அதிலும் காதல் வரும் என்று அறிந்தேன்!-அதன் பின்
முகத்தில் தோன்றும் இயல்பான சிரிப்பை துறந்தேன்!-இறுதியில்
காதலுக்காக அவளிடம் என்னை இழந்தேன்...!
(இன்று வாழ்கிறேன் நடை பிணமாய்)

காதலிக்காக இதயத்தை கொடுக்கும் காதல் கதை

உயிரே

காதலிப்பதை விட
காதலிகப் படுவது
பாக்கியம்...
அந்த
பாக்கியம்
எனக்கு மட்டும்
கிடைக்கவே கிடைக்காத
உயிரே...

Saturday, February 13, 2010

Friday, February 12, 2010

கவிதை

பார்த்தேன் ரசித்தேன்

சொர்க்கம்

நினைவு

என் இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்!!!!

விஷம்

காதல்
வீஷமென்று சொன்னார்கள்
நான் அவர்களை பைத்தியகரர்கள்
என்றேன்....
காதல்
அமிர்தமென்றார்கள்
ருசித்து பார்த்தேன்....
தயவுசெய்து என்னிடம்
காதலென்றால் என்வென்று
கேட்காதீர்கள்
ஏனெனில்,
உணர்வுகளே இல்லாத உடலுக்குள்
நான்...

IDH@Y@

விழுந்தேன்

எதிர்பார்ப்பு

orkut

orkut-ல்
என் கவிதைகளை
படிக்கும் அனைவரும் கேட்கிறார்கள்
லவ் பெயிலியரா?என்று
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்?
என் கவிதைகளுக்கு காரணம்
காதல் இல்லை நட்பு என்று....

தோழி



கவிதை

எனக்கு தெரியும்
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத் தான் என்று ...
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல
நான் தான் என்று!!!!

மழை